தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலிலதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொது தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு 3,300 மாணவ-மாணவிகளுக்கு எழுதுபொருள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர்கள் லட்சுமணன், புனிதா ஆகியோர் வரவேற்று பேசினர். முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியிட் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்கள் 3,300 மாணவ - மாணவிகளுக்கு எழுதுபொருட்களை வழங்கி பேசுகையில், புரட்சி தலைவி அம்மா அவரகளின் ஆட்சியில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் 14 வகையான கல்வி உபகரனங்கள், விலையில்லா மிதிவண்டி, லேப்டாப், உயர் கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவிகளுக்கு ஊக்க தொகை என எண்ணற்ற பலநல்ல திட்டங்களை செயல்படுத்தி மாணவ செல்வங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் புரட்சி தலைவி அம்மா என்றும், மாணவர்கள் நன்றாக படித்து பள்ளி கல்வியை முடித்து கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வியை பெறுவதே, அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உன்மையான பரிசாகும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், பேரூராட்சி கவுன்சிலர் விமலன், அதிமுக நிர்வாரிகள் கண்னையன், புதூர் சுப்ரமணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, கிளை செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக