தருமபுரி மாவட்டத்தின் ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலை நோக்கு பேரமைப்பு (ACTIV) சார்பாக மாவட்ட தொழில் மையத்தில் தேநீர் விருந்து கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் தருமபுரி மாவட்டத்தில் எஸ் சி/எஸ் டி தொழில் முனைவோர்களுக்கான, தொழில் முதலீட்டு வாய்ப்புகள், தொழில் வளர்ச்சிகள், மத்திய மாநில அரசுகளின் தொழில் திட்டங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் வாய்ப்புகள், உலகளாவிய தொழில் வாய்ப்புகள், எதிர்கால தொழில் வாய்ப்புகள், குறித்து விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் மாவட்ட தொழில் மையம் கிருஷ்ணன் தருமபுரி மாவட்ட தலைவர் ஆனந்தசெல்வம், ஆக்டிவ் நெட்வொர்க் தலைவர் தமிழ் பிரியன், கிருஷ்ணகிரி மாவட்டம் தலைவர் மகேந்திரன், தர்மபுரி வட்டாரம் ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக