தர்மபுரி பெரியார் சிலை அருகில் தருமபுரி மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடந்தது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

தர்மபுரி பெரியார் சிலை அருகில் தருமபுரி மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடந்தது.

1002420552

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தமிழகத்தில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் தின்னை பிரச்சாரம் துவக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி அம்மா பேரவை செயலாளர் அவர் வெற்றிவேல் ஏற்பாட்டின் பேரில் தருமபுரி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் எம் எல் ஏ தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். 


அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரை ஆற்றினார். அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், விவசாய அணி தலைவர் டி ஆர்.அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி,  ஒன்றிய செயலாளர் நீலாபுரம் செல்வம் என்.ஜி.எஸ் பிரகாசம் பழனி உள்ளிட்டர் சிறப்புரையாற்றினர். தர்மபுரி பெரியார் சிலை பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசாரம் வழங்கி தொடர்ந்து ஆறுமுகம் ஆசாரி தெரு தர்மபுரி பேருந்து நிலையம் முகமது கிளப் ரோடு போன்ற பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார்.


இந்த நிகழ்வில் தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன் தர்மபுரி நகர மன்ற உறுப்பினர்கள் அலமேலு சக்திவேல். தேவா செந்தில், உமையாமையை நாகேந்திரன், சத்யா கார்த்திக், நாகராஜன் மாவட்ட, ஒன்றிய, நகர பேரவை மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad