தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியில் அமைந்துள்ள சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள் நடந்து முடிந்த நவம்பர் - டிசம்பர் பெரியார் பல்கலைக்கழக தேர்வுகளில் சாதனை நிகழ்த்தி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மகளிர் கல்லூரிகளில் சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனையை கொண்டாடும் வகையில் துறைவாரியாக அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் என அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினார், மேலும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை கல்லூரியின் தாளாளர் திரு.கை செந்தில்குமார் அவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர். எஸ் .பிரேம குமாரி அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக