பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு திமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 பிப்ரவரி, 2025

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு திமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் திமுக பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்சி பேரூர் கழகசெயலாளர், பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி   தலைமையில்  நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய துணை செயலாளர் பி.எல்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்  பேருந்து  நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா  அவர்களின் திருவுருவ படத்திற்க்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில்   வார்டு கவுன்சிலர்கள் சரவணன், ரூஹித், சாதிக் பாஷா, மோகன், ஜெயந்திமோகன், வகாப்ஜான், மன்சூர், சாஜன்,  திமுக கிளை செயலாளர்கள் கணேசன், மியான், படவட்டை, உள்ளிட்ட கட்சி தொண்டர்கள்  திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad