இந்நிகழ்ச்சிக்கு அதிமுகவின் ஒன்றிய செயலாளர் கோபால், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து பேருந்து நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி கிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலகிருஷ்ணன், முன்னாள் மாணவர் அணி செயலாளர் முருகேசன், புதுர் சுப்ரமணி, வீரமணி, கவுன்சிலர் விமலன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, கன்னையன், அவைத் தலைவர் முர்த்துஜா, முன்னாள் கவுன்சிலர் ராஜா, சாம்ராஜ், சரவணன், மாதையன், சின்னசாமி, கிளை செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக