தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜீவாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்வினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் இந்த வருடம் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சுகந்தி ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கடந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக