ஜோதிஅள்ளி கிராமத்தில் ஆட்டோ டிரைவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 பிப்ரவரி, 2025

ஜோதிஅள்ளி கிராமத்தில் ஆட்டோ டிரைவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது. 46) இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி சிவக்குமார் திடிரென காணாமல் போனார்.


இவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பாலக்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை ஜோதி அள்ளி கிராமத்தில் உள்ள குட்டையன் என்பவருக்கு சொந்தமான புளிய மரத்தில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் உள்ளதாக பாலக்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சடலத்தை மீட்டு விசாரித்ததில் இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த  காணாமால் போனதாக கூறப்பட்ட ஆட்டோ டிரைவர் சிவக்குமார் என்பது தெரிய வந்தது.


தகவலறிந்து வந்த அவரது உறவிணர்கள் சிவக்குமாரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகவும், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கூறி போலீசாரை முற்றுகையிட்டனர். தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் சிவக்குமாரின் உறவினர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


அதனை தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad