இக்காட்சி வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தை வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த நாயை கவ்வி செல்லும் காட்சி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பாலக்கோடு வனத்துறையினர் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை கண்கானித்து வருகின்றனர். மேலும் வாழைத்தோட்டம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் கூறுகையில் வாழைத்தோட்டம், ஜோடி சுனை பகுதியில் விவசாயி வீட்டின் முன்பிருந்த நாயை சிறுத்தை கவ்வி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுத்தைகள் சுற்றி வருவதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து தொடர்ந்து 3வது நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக