மொரப்பூர் கிழக்கு மண்டல் சார்பில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 பிப்ரவரி, 2025

மொரப்பூர் கிழக்கு மண்டல் சார்பில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அருர் வட்டம் மொரப்பூர் கிழக்கு மண்டல் சார்பில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர் M.சரவணன் தலைமையில் ஒன்றிய பிரதிநிதி சென்னம்பட்டி G.சுரேஷ் மூத்த முன்னோடிகள் முன்னிலையில் மண்டல் மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களை கிராம வாரியாக கொண்டு சேர்க்க வேண்டும், கிளை நிர்வாகிகள்  ஒன்று சேர்ந்து அனைத்து கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் அதில் போடுகின்ற பொதுமக்களின் தீர்மானங்களை நிறைவேற்றப்பட வேண்டும். மொரப்பூர் கிழக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


மொரப்பூர் கிழக்கு மண்டல சார்பில் மாதம் ஒருமுறை செயற்குழு கூட்டம் நடைபெறும், மொரப்பூர் கிழக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் பாஜக கொடியேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

Post Top Ad