தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 11வார்டு அல்லாகோவில் தெருவில் புதிய கழிவுநீர்கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
11வது வார்டு அல்லா கோயில் பகுதியில் நீண்ட நாட்களாக பழுதான சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பேருராட்சி பொதுநிதியில் இருந்து 35 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்குபேருராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் மசியுல்லா, பட்டுஅஜிஸ்வுல்லா, சபியுல்லா, சுதாத்மியன், இசாக் 11 வார்டு கிளை செயலாளர் ஜபி உல்லா, வாகப்ஜான் ரூஹித், சாதிக், சாஜன் மற்றும் திமுக கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என திராளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக