பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அரிமா சங்கம், அரசு மருத்துவமனை பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து இரத்ததான முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அரிமா சங்கம், அரசு மருத்துவமனை பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து இரத்ததான முகாம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அரிமா சங்கம்,  அரசு மருத்துவமனை  தருமபுரி, பென்னாகரம் குருதி வங்கி மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை  இணைந்து இரத்ததான முகாம் நடத்தினார்.


இம்முகமிற்க்கு கல்லூரி முதல்வர் செல்வராணி தலைமை வகித்தார். முகாமிற்க்கு பாலக்கோடு அரிமா சங்கம்  தலைவர் சி.கேசவராஜ், பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம், கல்லூரியின் துணை முதல்வர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் ஊரக நலப்பணிகள் மற்றும் சுகாதார இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி அவர்கள் கலந்து கொண்டு  முகாமினை துவக்கி வைத்து. மாணவர்களிடையே இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 


இந்நிகழ்ச்சியில் தர்மபுரி, பென்னாகரம் இரத்தவங்கி மருத்துவர்கள் கனியா, அருண்பிரசாத், மருந்தாளுநர் முத்துசாமி, மருத்துவ ஆலோசகர் முருகன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இம்முகாமில் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என  85 தன்னார்வலர்கள் இரத்த தானம் வழங்கினர்.


இதில் அரிமா சங்க செயலாளர்கள் கிரிதர் மற்றும் சக்திவேல்,பொருளாளர் முத்து, முன்னாள் தலைவர் ராஜாமணி மற்றும்  அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முருகன் மற்றும் சந்தோஷ்குமார் இரத்ததானம் வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad