கடத்தூர் நூலகர் சி சரவணன் எழுதிய நானும் ஒரு பெண்தானே என்னும் சமூக நாவல் வெளியீட்டு விழா இன்று தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. விழாவுக்கு படைப்பாளர் பதிப்பாளர் சங்கச் செயலாளர் கூத்தப்பாடி மா. பழனி தலைமை வகித்தார். தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் இரா.சிசுபாலன் முன்னிலை வகித்தார். தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. செந்தில் நூலை வெளியிட, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. கௌரிசங்கர் பெற்றுக் கொண்டார்.
தருமபுரி மாவட்டத் தமிழ் கவிஞர் மன்றத் தலைவர் கோ.மலர்வண்ணன் நூலை அறிமுகம் செய்து பேசினார். தகடூரான் அறக்கட்டளை தமிழ்மகன் இளங்கோ, குறள்நெறிப் பேரவை செயலாளர் புலவர் பே.வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினர். நூலாசிரியர் நூலகர் சி சரவணன் ஏற்புரை வழங்கினார்.
முன்னதாக படைப்பாளர் சங்க பொருளாளர் அறிவுடைநம்பி வரவேற்புரை வழங்கினார். முடிவில் இரா. முத்துலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பெரு. முல்லையரசு, கே.ஆர்.அப்பாவு, சஞ்சீவராயன், குமரவேல், கோவிந்ராசு, ஆதிமுதல்வன், கே.வி.குமார், மாரி கருணாநிதி, சுந்தர்ராஜன், மாலதி அனந்த பத்மநாபன் உள்ளிட்ட கவிஞர்கள், எழுதியுள்ளார்கள், இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக