ஆற்றைக் கடக்க முயன்ற போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் ஒருவர் மீட்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

ஆற்றைக் கடக்க முயன்ற போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் ஒருவர் மீட்பு.

1002463532

ஒகேனக்கலில் தடையை மீறி ஆற்றை கடக்கும் போது காவிரி ஆற்றில் வாலிபர் அடித்து செல்லப்பட்டார். ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தேவரூத்து பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் விக்னேஷ் வயது  இவர் தனது உறவினரின் காரியத்திற்காக ஒகேனக்கல் வந்துள்ளார். ஒகேனக்கலில் உள்ள முதலைப்பண்ணை அருகே உள்ள காவிரி ஆற்றில் காரியம் செய்தனர்.


பின்னர் ஏத்தமடுவு இடத்தில் விக்னேஷும் அவரது நண்பரும் காவிரி ஆற்றில் ஆற்றை கடக்க முயற்சி செய்தனர். அப்போது விக்னேஷ் பாதி ஆற்றை கடக்கும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். மேலும் ஒருவர் ஆற்றில் தத்தளித்து கிடப்பதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஒகேனக்கல் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் தத்தளித்த அவரை காப்பாற்றினர். 


பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக ஒகேனக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தர்மபுரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.


மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விக்னேஷை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad