பட்டாசு அலைகள் / கிடங்களுக்கு பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிக்க அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

பட்டாசு அலைகள் / கிடங்களுக்கு பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிக்க அழைப்பு.


தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள் விதி 2008-ன் கீழ் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள 1. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை (LE-01), 2. பட்டாசு விற்பனை நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் (LE-05), 3. வெடிமருந்து சேமிப்பு மற்றும் விற்பனை கிடங்குகள் (LE-03) ஆகியவற்றினை ஆய்வு மற்றும் தலத்தணிக்கை மேற்கொள்ள வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், தொழிலாளர் நலம், துணை இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், மாவட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் ஆகியோரை கொண்ட குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.


இக்குழுவினர் உரிமம் பெற்றுள்ள நபர்கள்/நிறுவனங்கள் வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் செயல்படுவது குறித்தும், பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு குறித்தும், ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் போது உரிமதாரர்கள் மற்றும் பொது மக்கள் தங்களது கருத்துக்களை ஆய்வுக்குழுவினரிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad