பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் கூட்டம், தொழிலாளர்கள் கூட்டமைப்பு சங்க மாவட்ட தலைவர் அன்புமணி தலைமையில் நடந்தது. இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.


இந்த பிரச்சார கூட்டத்தில் தொழிலாளர்களை அடிமை படுத்தும் நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெறு, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய், 100 நாள் வேலை திட்டத்தின் நாட்களை அதிகபடுத்தி கூலியை உயர்த்தி வழங்கு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடு, 8 மணி நேர வேலையை அதிகபடுத்தாதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜா, அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் மாநில துணைத் தலைவர் மணி, இந்திய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கலாவதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad