தருமபுரி மாவட்டம் நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் விஜய் புற்றுநோய் மருத்துவமனை மையம் இணைந்து தேசிய புற்றுநோய் தினம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் கடைபிடிக்கப்பட்டது. கல்லூரியின் மாணவர்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுகள், புற்றுநோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஸ் குமார் ராஜா வரவேற்புரை ஆற்றினார், முதல்வர் முனைவர் பரஞ்ஜோதி தலைமை உரை ஆற்றினார், கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த் அய்யா அவர்கள் தலைமை தாங்கினார், விஜய் புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் விஜய் முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தினார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பெருமாள் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் திருவாசகம் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக