பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில் பெரும்பாலை போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் சோதனை செய்ய நிறுத்திய போது கார் நிற்காமல் வேகமாக சென்றது, போலீசார் அந்த காரை பின் தொடர்ந்து சென்றனர், இதனை கண்ட அந்த கார் ஓட்டுநர் காரை பாதி வழியில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் அந்த சொகுசு காரை சோதனை இடத்தில் அதில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் 50 மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனை அடுத்து அந்த சொகுசு கார் மற்றும் போதைப்பொருளை பெரும்பாலை போலீசார் பறிமுதல் செய்தனர், மேலும் போதை பொருள் எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்றும் வாகனத்தை ஓட்டிய நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக