தர்மபுரி மாவட்டத்தில், கம்பைநல்லூர் அருகே உள்ள மல்லியம்பட்டி பகுதியில் இயங்கிவந்த ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று (24.02.2025) திடீரென பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், தொழிற்சாலையில் வேலை செய்த 3 பெண்கள் உடனடியாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்து, அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சரின் நிவாரண அறிவிப்பு:
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 லட்சம் ரூபாய் உதவித் தொகை அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த தொகை "முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில்" இருந்து வழங்கப்படும்.
உயிரிழந்தவர்களின் பெயர்கள்:
1. திருமலர் (38), கணவர்: விஜயகுமார்
2. செண்பகம் (35), கணவர்: மேகநாதன்
3. திருமஞ்சு (33), கணவர்: தியாகு
இவர்கள் அனைவரும் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். முதலமைச்சர் தனது அறிக்கையில், "இந்த திடீர் விபத்து மிகவும் வேதனை தருகிறது; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக