மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 3ம் கட்ட நிகழ்வு வரும் 19ம் தேதி நல்லம்பள்ளி மற்றும் தருமபுரி வட்டங்களில் நடைபெறவுள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 3ம் கட்ட நிகழ்வு வரும் 19ம் தேதி நல்லம்பள்ளி மற்றும் தருமபுரி வட்டங்களில் நடைபெறவுள்ளது.

1992777-mkstalin00

அரசின் சேவைகள் மக்களுக்கு விரைந்து சென்றுசேர “மக்களுடன் முதல்வர்” (மூன்றாம் கட்டம்)  திட்டம் முதல்வரின் முகவரித்துறை மூலம் நகர பகுதி மற்றும்  ஊரக பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, குக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் கோரிக்கை மனுக்களை அவர்களின் இருப்பிடத்திலேயே பெற்று தீர்வு காண ”மக்களுடன் முதல்வர்” (மூன்றாம் கட்டம்) திட்டத்தினை குக்கிராமங்களில் செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ஆணையிடப்பட்டு தருமபுரி மாவட்டம், தருமபுரி தொகுதியில்  19.02.2025 அன்று  நடைபெறவுள்ள “மக்களுடன் முதல்வர்” ”(மூன்றாம் கட்டம்) முகாம்  கீழ்கண்டுள்ள இடங்களில் நடைபெறவுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள பஞ்சாயத்துகள் அதற்கு எதிரே குறிப்பிட்டுள்ள முகாம் நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்து மனு அளிக்கலாம்.

 

Makkaludan Mudhalvar Camp in Panchayats

 

வ.
எண்

முகாம் நடைபெறும் நாள்

வட்டாரம்

முகாமில் பங்கு பெறும் பஞ்சாயத்துகள்

முகாம் நடைபெறும் இடம்

1

19.02.2025

1.நல்லம்பள்ளி

1. இண்டூர்

1.பழைய இண்டூர், அம்பேத்கார் சிலை அருகில்

2.பாலவாடி

 

 

2.பாலவாடி மேல்நிலைப்பள்ளி, இ-சேவை மையம் அருகில்

3.அதியமான் கோட்டை

 

 

3.அதியமான் கோட்டை அவ்வை காலனி, தொடக்கப்பள்ளி அருகில்

4.நல்லம்பள்ளி

 

4.நல்லம்பள்ளி மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம்

 

2.தருமபுரி

1.இலக்கியம்பட்டி

1. .நியூகாலனி விளையாட்டு மைதானம், நியாய விலைக்கடை அருகில்

 

மேற்படி முகாமில் கிராமபுற மக்களுக்கு அவசியமான ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை, எரிசக்தித்துறை, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை - உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட 15 அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் 44 வகையான சேவைகள் தொடர்பாக பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் முடிவுகாணவும், இ-சேவை மையங்களில் மீள விண்ணப்பிக்கப்படும் மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கவும், தெரிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இம்முகாம்களில் வழங்கி விரைந்து தீர்வுகாண கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad