இதனை தொடர்ந்து, தருமபுரி நகராட்சி, குமாரசாமிபேட்டை முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப, அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து, முதல்வர் மருத்தகத்தினை பார்வையிட்டு, முதல்வர் மருந்தகத்தின் மூலம் 5 பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கி, விற்பனையை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.02.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் "முதல்வர் மருந்தகம்" என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைதொடர்ந்து, தருமபுரி நகராட்சி, குமாரசாமிபேட்டை முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப, அவர்கள். குத்துவிளக்கேற்றி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு, அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, முதல்வர் மருந்தகத்தின் மூலம் 5 பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கி, விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப, அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2024 சுதந்திர தின விழாவில் உரையில் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக தொழில் முனைவோர் (Entrepreneur) மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/ D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மூலம் தொடங்கப்படும் 10 முதல்வர் மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களால் தொடங்கப்படும் 11 முதல்வர் மருந்தகங்கள். என மொத்தம் 21 முதல்வர் மருந்தகங்கள் இன்றைய தினம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் (Subsidy) ரூ.3.00 இலட்சம் வழங்கப்பட்டது. இதில் 50% தொகை (ரூ.4.50 இலட்சம்) உட்கட்டமைப்பு வசதிகளுக்காக (Infrastructure) ரொக்கமாகவும் 50 சதவீதம் தொகை மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் முதல்வர் மருந்தகங்களுக்கு மானியம் ரூ.2.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்: பெறும் வகையில், ஜெனரிக் மருந்துகள், (Generic Medicines) சர்ஜிக்கல்ஸ் (Surgicals), நியூட்ராசூட்டிக்கல்ஸ் (Neutraceuticals), சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் மற்றும் OTC Products ஆகிய அனைத்து விதமான மருந்துகளும் 25% தள்ளுபடியில் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்மூலம் தனியார் மருத்துவமனை / மருந்தகங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த விலையில் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக