இந்த முகாம்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையேற்று 196 பயனாளிகளுக்கு சுமார் 56 லட்சத்து 638 ரூபாய் மதிப்பிலான அரசு பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்ட அமைச்சர் நிகழ்ச்சிகளில் பேசும்போது "மத்திய அரசு அண்மையில் நடத்திய ஆய்வில் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண்கள் கல்வி பயிலும் மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்துள்ளது. அண்டைய மாநிலங்களை காட்டிலும் உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
மக்கள் இருக்கும் இடங்களுக்கே அரசு சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் பணிகளை செய்து வருகிறது. தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும். உங்களைத் தேடி 16 அரசுத் துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் மாலை வரை உங்களது கோரிக்கை மனுக்களை அளித்து உடனடியாக தீர்வு பெறலாம்.
தமிழக அரசு மகளிர் சுய உதவி குழுக்கள், புதுமைப் பெண், தமிழ் புதல்வன், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
பெண்களின் பாதுகாவலராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் தமிழக முதல்வரிடம் நேரில் வழங்கும் மனுக்கள் போல் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக