சமையல் கேஸ் கசிவு ஏற்பட்டு மாடி வீடு சேதம் தீ விபத்தில் கல்லூரி‌ மாணவி படுகாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 பிப்ரவரி, 2025

சமையல் கேஸ் கசிவு ஏற்பட்டு மாடி வீடு சேதம் தீ விபத்தில் கல்லூரி‌ மாணவி படுகாயம்.


சமையல் கேஸ் கசிவு ஏற்பட்டு மாடி வீடு சேதம் தீ விபத்தில் கல்லூரி‌ மாணவி படுகாயம்-ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை.


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மோட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவரது மனைவி மலர், இவர்கள் இருவரும் கட்டிட வேலைக்காக பெங்களூரில் வசித்து வருகின்றனர் , இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர், இவரது இரண்டாவது மகள் கலையரசி (25) இவர் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு மோட்டுபட்டி கிராமத்தில் உள்ள தங்களது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். 

 

நேற்று இரவு வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்று வந்து இரவு சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை ஆப் செய்யாமல் தூங்க சென்றுள்ளார். இதில் சிலிண்டரில் உள்ள வாய்வு முழுவதும் வீட்டின் ஒரு பரவி, நள்ளிரவில் திடீரென வெடித்து சிதறி உள்ளது, இதில் கலையரசி தீக்காய்களுடன் தூக்கி எறியப்பட்டுள்ளார். 


தகவல் அறிந்த அக்கம்பத்தினர் பாப்பாரப்பட்டி காவல்துறையினுக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பளத்துக்கு விரைந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் கலையரசி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மருத்துவமனைக்கும் முதலுதவி சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர், பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு தற்போது அனுப்பியுள்ளனர். 


மேலும் சம்பவ இடத்தில் விபத்து நடந்து எப்படி நடந்தது என்று தடவியல் நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சிலிண்டரில் இருந்த வாயு வெளியே வந்து வீடு இடிந்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடு வெடித்து அருகில் இருந்த ஓட்டு 5வீடுகள்   சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad