தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணியின் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
- திமுக தலைவரின் பிறந்தநாளான மார்ச் 3ஆம் தேதி, ஏழை மற்றும் எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
- தமிழ்நாட்டை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் மத்திய அரசை எதிர்க்கும் வகையில் தெரு பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
- 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான உத்தி குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி, கட்சித் தலைவருக்கு அர்ப்பணிக்கும் நோக்கில் ஒற்றுமையாக பணியாற்ற முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி, சட்டத்துறை இணை செயலாளர் தாமரை செல்வன், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் தங்கமணி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் இளையசங்கர், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கௌதம், தருமபுரி ஒன்றிய செயலாளர் காவேரி, நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், கலை, இலக்கிய மற்றும் பகுத்தறிவு பிரிவு தலைவர் குமார் உள்ளிட்ட பல்வேறு அணிகள் மற்றும் ஒன்றியங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக