இதில் பச்சியப்பன் என்பர் கடந்த 1980ம் ஆண்டு முதலே பச்சியப்பன் என்பவருக்கும் தியாகி சோலை என்பவருக்கும் நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது, இந்நிலையில் பச்சியைப்பன் இறந்து போன நிலையில் அவரது மகன் சன்முகம் தங்கள் சொத்துக்கறை பாகபிரிவினை செய்யும் பொழுது தியாகி சோலை என்பவரின் சொத்துக்களையும் சேர்த்து முறைகேடாக கையகபடுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் 2000ம் ஆண்டு நடந்தது. ஆனால் இது தியாகி சோலைக்கும் ஏவரது மகன் சசிகுமாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளனர். பின்னர் கடந்த 2021ம் ஆண்டு தியாகி சோலை தனது 99-வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த பின்னரே அவரது மகன் சசிகுமாருக்கு இந்த மோசடி சம்பவம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சசிகுமார் அசல் ஆவணங்களுடன் கடந்த 2022ம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் திமுகவை சேர்ந்த புளியம்பட்டி ராஜா என்பவர் திரைமறைவில் தியாகியின் சொத்துக்களை அபகரிக்க பச்சையப்பனின் மகன்கள் சன்முகம் மற்றும் மதியழகன் ஆகியோருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து பத்திர பதிவு துறை அலுவலகத்தில் தியாகி சோலையே நேரடியாக பச்சயைப்பனின் மகன்களுக்கு கிரயம் செய்து சொத்துக்களை விற்றதாக அவர்களை தனது தந்தை மற்றும் தன்னுடைய கையெழுத்துக்களை போட்டுள்ளனர்.
திமுகவை சேர்ந்த ராஜா தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக சொத்துக்களை பதிவு துறையில் பதிவு செய்துள்ளதாக தியாகியின் மகன் சசிகுமார் குற்றம் சாட்டி புகார் அளித்தும் இன்றுவரை எவ்வித நடவடிக்கயைும் காவல்துறையினர் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார். இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு 1.50 கோடி ரூபாய் ஆகும், தனது சொத்துக்களை இழந்து வாழ்வாதாரத்திற்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நீதீகேட்டு ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் மகன் தனது நிலங்களை மீட்க நீதி கேட்டு மீண்டும் கலெக்டர் சதீஷ் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக