தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட எர்ரணஹள்ளி ஊராட்சியில் உள்ள புதூர் வடையண்கிணனறு கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசதி வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு மற்றும் சின்டேக்ஸ் டேங்க் வைத்து தண்ணீர் வினியோகம் செய்து வந்த நிலையில் சின்டேக்ஸ் டேங்க் தண்ணீயின்றி காட்சி பொருளாக உள்ளது.
கோடை வெயில் அதிகரித்து காணப்படும் நிலையில் தண்ணீரை தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் பழுதான ஆழ்துளை கிணற்றை சீரமைக்க வேண்டும் என பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தால் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தனி அலுவலர் நியமிக்கபட்டுள்ளதால் அலுவலர் மெத்தனம்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சின்டேக்ஸ் டேங்க்கு தண்ணீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக