பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் தக்காளியில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பது குறித்து துணை ஆட்சியர் ஆலோசனை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 பிப்ரவரி, 2025

பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் தக்காளியில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பது குறித்து துணை ஆட்சியர் ஆலோசனை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கரகூர், பெல்ரம்பட்டி, சீரியம்பட்டி, திருமல் வாடி, அமானிமல்லாபுரம், கரகத அள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெருமளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.


இவர்கள் விளைவிக்கும் தக்காளியை பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று பொது மக்களுக்கு சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகும் தக்காளி சில நேரங்களில் கிலோ ஒரு ரூபாய் வரை விலை குறைந்து விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.


இதனை தடுக்க விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தக்காளி கூல் தயாரிக்கும் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து பாலக்கோடு பகுதியில் தக்காளியை  பதப்படுத்தி தக்காளி ஜூஸ், பூரி, கெட்ச்அப், சாஸ் தயாரிக்கும் வகையில்  தொழில் தொடங்க  ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சதிஷ் அவர்களின் ஆலோசனைப்படி, துணை ஆட்சியர் சவுந்தர்யா பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் ஆய்வு செய்து தக்காளி விவசாயிகள்,  வியபாரிகள் மற்றும் உழவர் சங்கத்தினரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது வேளாண்மை வணிக துணை இயக்குநர் இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குநர் கங்கா, வேளாண்மை அலுவலர் சிவசக்தி,  பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வம், சத்யா, அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad