தருமபுரி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத்தலைவர் / தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

தருமபுரி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத்தலைவர் / தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

A1-25.2%20(1)%20%5Bphotoutils.com%5D%20(1)

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று (25.02.2025) மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர் / தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர் திரு.ஆ.மணி அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகளின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


இத்தகைய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களுக்கான வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு, அத்தகைய திட்டங்களை அரசுத்துறை அலுவலர்கள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒன்றிய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.


அதன்படி இக்கூட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அதற்குரிய தீர்வையும் கண்டறிந்து அத்திட்டத்தினை காலதாமதமின்றி விரைவாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். துறை அலுவலர்கள் அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர் திரு.ஆ.மணி அவர்கள் தெரிவித்தார்.


தருமபுரி மாவட்டத்தில் ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்), தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் (ஜல்ஜீவன் மிஷன்), பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முதல்வரின் முகவரி, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதா இயக்கம், தமிழ்நாடு பைபர் நெட், கல்வித்துறையின் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (சமக்ரா சிக்ஷா), வனத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மீன்வளத்துறை, வேளாண்மைத்துறை, அளவை மற்றும் நில பதிவுத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள், தமிழ்நாடு மின்சாரத்துறை, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்திட்டம், நகராட்சி, இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் எடுத்துரைக்கப்பட்ட விவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை தேர்வில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், இத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் அகராதிகளையும் (Dictionary) மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர் திரு.ஆ.மணி அவர்கள் மற்றும் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் வழங்கினார்கள்.


இக்கூட்டத்தில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.கேத்ரின் சரண்யா, இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.அ.லலிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.பாலகிருஷ்ணன், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, நலக்குழு உறுப்பினர்கள் திருமதி.முத்துலட்சுமி, திரு.செங்கண்ணன், திரு.சரவணன், திரு.ராஜகோபால் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad