தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டுக்கான மானியக்கோரிக்கையில் ”தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களின் பிறந்தநாளன்று உள்ளுர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.


அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையிர் அறிந்து கொள்வதற்காக திரு.ச.பொ.கோவிந்த செட்டியார், பாவலர் மணிவேலனார், எழுத்து வேந்தர் தகடூரான், செந்தமிழ்ப் பேச்சாளர் பெ.பெரும்பாக்கன் ஆகியோருக்கு 26.02.2025 அன்று இலக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளது.


தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவு கூறும் வகையில் பள்ளி / கல்லூரிகளில் பயிலக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் 24.02.2025 அன்று தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் காலை 10.00 மணிக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/-, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.


கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப்போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேர் தெரிவுசெய்து அனுப்பவேண்டும். 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி பள்ளிக்கு ஒருவர் எனத் தெரிவுசெய்து மாணவர்களை அனுப்பி வைத்தல் வேண்டும். போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளன.


தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி / கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad