தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை தொடங்கி நாளை வெள்ளிக்கிழமை அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவையொட்டி தர்மபுரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கெளதமன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்
அப்போது பக்தர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்டி குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும், பக்தர்களுக்கு முறையாக அர்ச்சனை ரசீது வழங்க படுகிறதா எனவும், கோவிலை சுற்றி பக்தர்களின் பாதுகாப்பிற்க்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பன குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக ஸ்ரீ புதூர் மாரியம்மனை தரிசனம் செய்தார். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பாலக்கோடு டி.எஸ்.பி.மனோகரன் அவர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
அது சமயம் அறநிலையத் துறை ஆய்வாளர் கோமதி, செயல் அலுவலர் செந்தூர்ராஜன், மோதுர் குந்தியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பூமணி, திமுக ஒன்றிய துணை செயலாளர் பி.எல்.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக