காரிமங்கலம் திமுக கட்சி அலுவலகத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் - கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 பிப்ரவரி, 2025

காரிமங்கலம் திமுக கட்சி அலுவலகத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் - கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள திமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி, மாநில தீர்மானக் குழு உறுப்பினர் கீரை.விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் முருகன், மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி ஒன்றிய செயலாளர் கண்ணபெருமாள், நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு பேசும் போது, வரும் மார்ச் 1-ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமர்சையாக மாவட்டம் முழுவதும் கொண்டாட வேண்டும், வரும் சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட  தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் குறித்து பேசினார்.


இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வக்கில் கோபால், அடிலம் அன்பழகன், முனியப்பன், பஞ்சப்பள்ளி அன்பழகன், சந்திரமோகன், வேடம்மாள், செங்கண்ணன், சரவணன், முத்துக்குமார், நெப்போலியன், பேரூர் கழக செயலாளர்கள் பி.கே.முரளி, வெங்கடேசன், மோகன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவகுரு, துணை அமைப்பாளர் மகேஷ்குமார், ஹரிபிரசாத் மற்றும் அனைத்து கிளை, நகர, ஒன்றிய, மாவட்ட, மாநில மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad