மாரண்ட அள்ளி தனியார் மண்டபத்தில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

மாரண்ட அள்ளி தனியார் மண்டபத்தில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்.


மாரண்ட அள்ளி தனியார் மண்டபத்தில் பாலக்கோடு மேற்கு  ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் - இந்தி திணிப்பை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.


பாலக்கோடு பிப் 26 ; தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி தனியார் மண்டபத்தில், பாலக்கோடு திமுக மேற்கு  ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய  அவைத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் சண்முகம்,சரிதா குமார், அண்ணாமலை மாவட்ட பிரதிநிதிகள் ஜெகநாதன், வெங்கடாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன் செயற்குழு கூட்டத்தை துவக்கி வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 4 ஆண்டுகால சாதனைகளை எடுத்துரைத்தார்.


அதனை தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு மும்மொழி கொள்கை திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பதை கண்டித்தும், மார்ச் 1ம் தேதி முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 1000 நபர்களுக்கு வேட்டி சேலை மற்றும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கிளை கழகங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றுதல், இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இக்கூட்டத்தில் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அருள் பிரகாஷ் அணிகளின் துணை அமைப்பாளர்கள் மணிவண்ணன், சிவகுமார், பாண்டுரங்கன், தர்மன், முகுந்தன், சக்திவேல், தலைவர் வி.சி.குமார், ஆயக்கட்டு தலைவர் நடராஜன், சாமனூர் குமார், முன்னாள் கவுன்சிலர் ராஜா, சரவணன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குட்டி (எ)வெங்கடேசன், முன்னாள் ஒ. துணை செயலாளர் சாதன், ஐ.டி.வங்கி தமிழலகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad