பாலக்கோடு எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டி.எஸ்.பி. தலைமையில் போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

பாலக்கோடு எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டி.எஸ்.பி. தலைமையில் போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலக்கோடு உட்கோட்ட காவல் சரகம் சார்பில் போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி டி.எஸ்.பி.மனோகரன் தலைமையில்  நடைபெற்றது.


வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் அன்பரசன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் தீர்த்த லிங்கம் தலைமை உரை ஆற்றினார். பேராசிரியர் சிவானந்தம் வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு காவல் உட்கோட்ட டி.எஸ்.பி.மனோகரன் அவர்கள், கலந்து கொண்டு கல்லூரி மாணவ -  மாணவிகளிடையே  போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருளால் ஒரு குடும்பம் சீர் அழிவதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும், என்பதை பற்றியும், எடுத்துரைத்தார்.


மேலும் போதைபொருள் இல்லாத மாநிலமாக நமது தமிழ்நாட்டை மாற்ற எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞர்கள் முன்வர வேண்டும்  என  கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், காவல் உதவி ஆய்வாளர் கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பேராசிரியரிர் அனிதா நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad