தொழிலாளர்கள் தெரிவிக்கையில்... ஆலையில் நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் டன் வரை அரவைத்திரன் கொண்ட இந்த சர்க்கரை ஆலையில் தற்போது வெறும் 600டன் வரை மட்டுமே கரும்பு அரைக்கப்படுவதாகவும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆலையை நிறுத்தி நிறுத்தி இயக்கி வருவதாகவும்
ஆலை நிர்வாகத்தில் உள்ள கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன், கரும்பு அலுவலர்கள் சாந்தி, விஜியா, கேசவன், சக்திவேல் ஆகியோர் விவசாயிகளிடம் சென்று சர்க்கரை ஆலைக்கு அதிக அளவில் கரும்பு பதிவு செய்யாமல், சர்க்கரை ஆலையில் இயங்கும் பள்ளி நிர்வாகத்தை கவனித்து வருவகின்றனர்.
இதனால் வருட வருடம் கரும்பு அரவை குறைந்து கொண்டே வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு சர்க்கரை ஆலை மூடு விழா காணும் அவல நிலை ஏற்படும் என்றும் இதே நிலை நீடித்தால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும் எனவும், எனவே தமிழக அரசு ஆலை நிர்வாகத்தில் உள்ள கரும்பு அலுவலர், கரும்பு பெருக்கு அலுவலர் உள்ளிட்டவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி உள்ளிருப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக