இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், மருத்துவர் சந்திரமோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், தீபொறி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வென்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதாைனம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி கிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாணவர் அணி செயலாளர் முருகேசன், புதுர் சுப்ரமணி, வீரமணி, ரவி, கொளந்தை, கவுன்சிலர் விமலன், குருமணிநாதன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, கன்னையன், அவைத் தலைவர் முர்த்துஜா, முன்னாள் கவுன்சிலர் ராஜா, சாம்ராஜ், சரவணன், மாதையன், சின்னசாமி, கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக