தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா அவர்கள் மேற்பார்வையில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன் அவர்கள் ஒருங்கிணைப்புடன் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு தாலுக்காகளில் பணியாற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
காரிமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் துரைவேல் வரவேற்புடன் கூட்டுறவு சார் பதிவாளர்கள் கௌதம் , ரத்தீஸ்வரி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் அருண், மொரப்பூர் ஒன்றியம் திருப்பதி ஆகியோர் முன்னிலையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில், செயல் விளக்கத்துடன் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற லேசர்சாப்ட் டெக்னாலஜி பயிற்சி பார்ட்னரின் பயிற்றுனர் தாரணி பங்கேற்று, பவர் பாயிண்ட் மூலம் பயிற்றுவித்தார்.
பயிற்சியில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் தாங்கள் பணி புரியும் கடைகளில் பின்பற்ற வேண்டிய தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், பொருள் மேலாண்மை, பொருட்கள் இருப்பு வைத்தல், கையாளுதல், பராமரித்தல் மேலும் உயிரியல் காரணிகள் ஏற்படும் விளைவுகளை தவிர்த்தல் அதாவது எலி, கரப்பான், பல்லி மற்றும் அயல் உயிரிகள், பூச்சிகள் அண்டாமல் தவிர்த்தல் , வராமல் தடுத்தல் குறித்து தெளிவாக எடுத்து உரைத்தனர்.
தேவையற்ற பொருட்கள், காலியான சாக்கு பைகள், அட்டைப்பெட்டிகள் உடனுக்குடன் அப்புறப்படுத்திடவும், ஸ்டாக் வரும் போதும், விநியோகிக்கும் போதும் கீழே இரையும் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தேவையான வெளிச்சம் காற்றோட்டம் இருக்கும்படி பணியாற்றும் சூழ்நிலை இருத்தல் வேண்டும். தாங்கள் உடல் நலனையும் கண்காணித்து கொள்ள விழிப்புணர்வு செய்தனர். ஒவ்வொரு விற்பனையாளரும், பணியாளரும் மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம் என எடுத்துரைத்தனர், உணவு பொருட்கள், பாக்கெட்டுகள் கொண்டு நேரடியாக செயல் விளக்கம் அளித்தார்.
இப்பயிற்சி முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி நன்றி உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக