தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ சார்பில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை கண்டித்து ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்த்திற்க்கு தமிழ்நாடு அரசு ஊழியர் மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்து, 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் தொகையை உடனே வழங்கிடு, சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை இலட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிடு, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்று, பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களை ரத்து செய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் நாராயணன், சந்திரசேகர், சாம்ராஜ், சீதாலட்சுமி, கோவிந்தன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக