தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் கௌரவ விரிவுரையாளர்களை வைத்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழக அரசு தற்போது கௌரவ விரிவுரையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் யுஜிசி விதிமுறைப்படி மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால் தமிழக அரசோ சொற்ப ஊதியமே வழங்கி வருகிறது. கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதசம்பளமாக வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவையும் கடை பிடிக்காமல் அலட்சியம் செய்கிறது.
இதனையடுத்து தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து கண்டனத்தை தெரிவிக்கும் பொருட்டு பல்வேறு அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், வாயில் முழக்க போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு வகையான ஆர்ப்பாட்டங்களை தமிழக அரசுக்கு எதிராக நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து இன்று தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் சுமார் 60 கௌரவ விரிவுரையாளர்கள் சம்பள உயர்வு கேட்டு தொடர் போராட்டம் கல்லூரி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக கெளரவ விரிவுரையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட உள்ளதாக தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக