தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, எம்.ஜி.சாலை தனியார் கூட்டரங்கில் பாஜக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாலக்கோடு நகர தலைவர் RK.கணேசன், பாலக்கோடு கிழக்கு ஒன்றிய தலைவர் சிவானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இக்கூட்டத்திற்க்கு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட பாஜக தலைவர் சரவணன் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார். பாலக்கோடு நகர மண்டல் தலைவராக R.K.கணேசன் ஆகியோர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்க்கு பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொதுசெயலாளர் வெங்கட்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் தெய்வமணி, மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட மகளிர் அணி தலைவர் சங்கீதா, ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பட்டாபி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, முன்னாள் மண்டல் தலைவர் பசுபதி, ஒன்றிய பொது செயலாளர் ராமசாமி, நகர பொதுசெயலாளர் தண்டபாணி, மாவட்ட மீனவர் அணி தலைவர் மாதையன், நகர பொருளாளர் முனியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக