இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ந. நஞ்சப்பன் மனைவி லட்சுமி அம்மாள் மறைவு; இரா.முத்தரசன் நேரில் அஞ்சலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ந. நஞ்சப்பன் மனைவி லட்சுமி அம்மாள் மறைவு; இரா.முத்தரசன் நேரில் அஞ்சலி.


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ந. நஞ்சப்பன் மனைவி லட்சுமி அம்மாள் மறைவு 
முன்னாள் எம்பி செந்தில், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வேலுமணி, அன்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சடங்குகள் அனைத்தும் முடித்து சுடுகாட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேரில் அஞ்சலி


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர், முன்னாள் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க சிறப்பு தலைவர் ந. நஞ்சப்பன் அவர்களின் மனைவி லட்சுமி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தருமபுரி மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரும், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான ந. நஞ்சப்பன் அவர்களின் வாழ்விணையர் திருமதி லட்சுமி அம்மாள் (64) இன்று (17.02.2025) அதிகாலை 4.15 மணிக்கு பென்னாகரம் அருகில் உள்ள கே.அக்ராகரம் கிராமத்தில் அவரது இல்லத்தில் காலமானார்.
இவர்களுக்கு செம்மலர், வெண்ணிலா என இரண்டு மகள்களும், கதிரவன் என்ற மகனும் இருகிறார்கள்.


மறைவு செய்தியறிந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேரில் வந்து லட்சுமி அம்மாள் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமய்யா, தேவராசன், யுசிபிஐ மாநில தலைவர் பட்டாபிராமன் சிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கிருஷ்னகிரி டி.ராமசந்திரன் எம்எல்ஏ, சேலம் மோகன், ஈ.ரோடு மாவட்ட பொறுப்பு செயலாளர் மாதேஸ்வரன் தமிழ்நாடு பழங்குடிமக்கள் சங்க மாநில நிர்வாகிகள் பரமசிவம், கெம்பன், பூபாலன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, பாட்டாளி மக்கள் கட்சி மாநில கவுரவ தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி,பாமக மாவட்ட செயலாரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தீர்த்தராமன், ஆர்எஸ்பி கட்சி மாநில செயலாளர் ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இரா.சிசுபாலன், மூத்த தலைவர் இளம்பரிதி, முன்னாள் மாவட்ட செயலாளர் குமார், விசிக மாவட்ட செயலாளர் கருப்ண்ணன், முன்னாள் எம்பி செந்தில், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வேலுமணி, அன்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சடங்குகள் அனைத்தும் முடித்து சுடுகாட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad