பாலக்கோடு அருகே மூங்கப்பட்டியில் முறைகேடாக பத்திர பதிவு செய்து வீட்டை அபரிகரிக்க முயல்வதாக லாரி டிரைவர் புகார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 பிப்ரவரி, 2025

பாலக்கோடு அருகே மூங்கப்பட்டியில் முறைகேடாக பத்திர பதிவு செய்து வீட்டை அபரிகரிக்க முயல்வதாக லாரி டிரைவர் புகார்.


தர்மபுரி மாவட்டம்,  பாலக்கோடு அடுத்த மூங்கப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (45) இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரின் தாத்தாவின் 37  சென்ட் நிலத்தில்  தாய் வழி சொத்தில்  இவருக்கு உரிய  8 சென்ட் நிலத்தில் கடந்த 30 வருடமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த 10 வருடத்திற்க்கு முன்னர் கோவிந்தசாமியின் சித்தி கிருஷ்ணவேணி (55 ) முறைகேடாக 37 சென்ட் நிலத்தையும் அவரது பெயரில் கிரையம் செய்து கொண்டார்.


இதனை அறிந்து கோவிந்தசாமி கிருஷ்ணவேணியிடம் கேட்டபோது தாத்தா பெயரில் இருந்து தனது பெயருக்கு தற்போது கிரையம் செய்து உள்ளதாகவும், விரைவில் சகோதரிகள் 4 பேருக்கும் பாக பிரிவினை செய்து தருவதாகவும் கூறியுள்ளார்.


இதனை நம்பி இருந்த நிலையில் கிருஷ்ணவேணி குடும்பத்தினர் கோவிந்தசாமி குடி இருந்து வரும் வீட்டை இரவோடு இரவாக  இடிக்க முயன்றார், இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் வாங்க கோரியும், இரவு நேரத்தில் வீட்டை இடிக்க குண்டர்களளோடு வந்து மிரட்டி வருவதாகவும், எங்களுக்கு யாரும் துணை இல்லாததால் தமிழக முதல்வர் குண்டர்களிடம் இருந்து எங்கள் குடும்பத்தையும் வீட்டையும் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் பாதுகாக்க வேண்டும் என கோவிந்தசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad