பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை நாய்களை கவ்வி செல்லும் வீடியோ காட்சி -கிராம பொதுமக்கள் பீதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை நாய்களை கவ்வி செல்லும் வீடியோ காட்சி -கிராம பொதுமக்கள் பீதி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது, உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் ஆடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும்   இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று விவசாயி விநாயகம்(50) என்பவரின் வீட்டின் முன்பு காவலுக்கு படுத்துகொண்டிருந்த இரண்டு நாய்களை கவ்வி கொண்டு மிண்டும் வனத்திற்கு செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். வனத்துறையினர் விரைந்து சிறுத்தையை பிடிக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad