பூமத்தம்பட்டி கிராமத்தில் கிணற்றில் இருந்து லாரி டிரைவர் சடலமாக மீட்பு - மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரணை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 பிப்ரவரி, 2025

பூமத்தம்பட்டி கிராமத்தில் கிணற்றில் இருந்து லாரி டிரைவர் சடலமாக மீட்பு - மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரணை.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பூமத்தம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது.32) இவரது மனைவி வித்யா இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது. 6 வயதில் சரண்யா என்ற மகளும், 4 வயதில் சதீஷ் என்ற மகனும் உள்ளனர். மஞ்சுநாத் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.


நேற்று முன்தினம் மாலை காரிமங்கலம் செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டிற்க்கு வரவில்லை, நேற்று காலை 10 மணிக்கு அவரது விவசாய கிணற்றின் அருகே மஞ்சுநாத்தின் மோட்டார்சைக்கிள், செருப்பு மற்றும் செல்போன் ஆகியவை இருந்ததை கண்ட அவரது குடும்பத்தினர் மஞ்சுநாத் கிணற்றில் விழுந்து இருக்கலாம் என சந்தேகப்பட்டு பாலக்கோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  70 அடி ஆழ கிணற்றில் 30 அடி வரை தண்ணீர் உள்ள நிலையில் கிணற்றில் முழ்கி தேடிய போது மஞ்சுநாத் உடல் இறந்த நிலையில் இருந்ததை அறிந்து, உடலை கயிறு மூலம் மேலே மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மது போதையில் கிணற்றில்  தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad