இந்த நிலையில் விசாரணைக்கு காவல்துறையினர் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததாக கூறி, கோவிந்தராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த ஏரியூர் காவல்துறையினர் கோவிந்தராஜனின் உடலை மீட்டு, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கோவிந்தராஜின் இறப்பில், மர்மம் இருப்பதாகவும் காவல்துறையினர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், கூறி உறவினர்கள் பென்னாகரம் அம்பேத்கர் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் வருவாய் துறையினர், பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக