பென்னாகரம் அருகே மூதாட்டியை கொன்று கொள்ளை, போலீசார் விசாரணை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

பென்னாகரம் அருகே மூதாட்டியை கொன்று கொள்ளை, போலீசார் விசாரணை.


பென்னாகரம் அடுத்த பெரியதோட்டம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபுராஜ் (64). இவர் மனைவி பத்மாவதி (60), இறுதினங்களுக்கு முன் தினம் இரவு, பத்மாவதி வீட்டிலும், பிரபுராஜ் வீட்டின் அருகே மாட்டு கொட்டகையிலும் துாங்கினர். நேற்றுமுன்தினம் காலை வீட்டிற்கு வந்த பிரபுராஜ், வீடு திறந்திருந்த நிலையில், பத்மாவதி வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்ததை பார்த்தார். மேலும், அவர் அணிந்திருந்த, 5 பவுன் தாலி செயின், ஒரு பவுன் மோதிரத்தை காணாமல் போனதும் கண்டு அதிர்ச்சியடைந்தார், சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தர்மபுரி எஸ்.பி., மகேஷ்குமார், பென்னாகரம் பொறுப்பு டி.எஸ்.பி., ராஜசுந்தர், இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில் பத்மாவதி துாங்கும் போது, பீரோ சாவியை தலையணை அடியில் வைத்து துாங்குவது வழக்கம். நேற்று முன்தினமும் அதேபோல் சாவியை வைத்து விட்டு, வீட்டு கதவிற்கு தாழ்பாள் போடாமல் துாங்கியுள்ளார்.


அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தலையணையால், அவரது முகத்தை அழுத்தி கொன்று விட்டு, அவரின் கழுத்திலிருந்த, 5 பவுன் தாலி செயின், கையிலிருந்த மோதிரம் உள்ளிட்ட, 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பீரோவை திறந்த திருடர்கள், அதிலிருந்த லாக்கரை திறக்காமல் விட்டதால், அதிலிருந்த, 8 பவுன் நகை தப்பியது என போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad