கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அச்செட்டிபள்ளி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்துள்ளார்.
இவரை தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இறந்த இவரை பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை. ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு காவல் ஆய்வாளர் சரவணன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் ஜலபதி ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், செந்தில், ஜெய் சூர்யா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை 128 ஆதரவற்றும், ஏழ்மையில் இறந்தோரின் புனித உடல்களை தங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக