கடத்தூரில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டு முன்பு கூடிய மர்ம நபர்களால் பரபரப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

கடத்தூரில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டு முன்பு கூடிய மர்ம நபர்களால் பரபரப்பு.

கடத்தூர் பகுதியில் பிரபலமான கல்வி நிறுவனம் நடத்தி வருபவர் எவரெஸ்ட் முனிரத்தினம் இவர் கடத்தூர் பகுதியில் பல்லவன் கிராம வங்கி அருகே மனைவி குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் அவரின் வீட்டு முன்பாக சுமார்-40 க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அவரின் வீட்டின் கதவை தட்டி போலீசார் வந்திருப்பதாக கூறி உள்ளனர். 


இதை அடுத்து வீட்டிலிருந்த அவரின் மனைவி ஜன்னல் வழியாக பார்த்து நீங்கள் யார்? எதற்காக வந்தீர்கள்? என கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் நாங்கள் அனைவரும் போலீசார் என பதில் கூறி,  அவர் மீது சேலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்கள், அதற்காக அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்து உள்ளோம் என கூறி இருக்கிறார்கள். அவர் வீட்டில் இல்லை  வெளியே சென்று இருக்கிறார், என கூறி  வீட்டினுள் இருந்து உள்ளார். இந்த நிலையில் உள்ளூர் போலீசார் சிலர் வந்து அது சம்பந்தமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.


இதில்  போலீசார் என கூறி வந்த வர்களிடம், உரிய ஆவணம் இல்லாமல் இருந்ததும், மிரட்டும் வகையில் விசாரனைக்கு பின் போலீசார் மற்றும் அவருடன் வந்தவர்கள் பலர் அங்கே இருந்ததனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்திற்கு சென்று வந்திருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு செய்ததற்க்கு மற்றும் விசாரணைக்கான எந்த ஆவணமும்  இல்லை என தெரிந்த பின்பு வருவாய்த்துறையினர் தாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என கூறி திரும்பி சென்ற சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் சம்பவ இடத்துக்கு செய்திக்காக சென்றனர். அப்பொழுது அங்கு இருந்தவர்கள் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




கடத்தூரில்  வங்கி அருகே நடந்த  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திய  நிலையில்  இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த   கடத்தூர் போலீசார், போலீசார் என கூறி  வந்திருந்தவர்களை காவல் நிலையத்திற்கு வரச்சொல்லிய நிலையில் அவர்கள் போலீஸ் டேசன் போகாமல் சென்றுவிட்டனார்.



 முனிரத்தினத்திற்க்கும் சென்னையை சேர்ந்த கஜேந்திரன், ராமச்சந்திரன், வசந்தகுமார், ஆகியோருக்கு இடையே நீதிமன்றத்தில் 123 வழக்குகள் நடைபெற்று வந்தது இதில்  தற்போது 110 - வழக்கில்   தீர்ப்பு  முனிரத்தினத்திற்க்கு சாதகமாக தீர்ப்பு ஆன நிலையில், மீதம்  உள்ள  வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில்,  போலீஸ்துறை  அதிகாரியின் ஒருவரின்   தூண்டுதலால் காவல்துறை சார்ந்தவர்கள் ஆல் கடத்தல், மிரட்டல் சம்பவத்தில் ஈடுபடவந்துள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த நிலையில்  கடத்தூரில் வங்கி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அதிகாலையில் நடைபெற்ற நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


 தர்மபுரி மாவட்ட காவல் துறையும், மாவட்ட ஆட்சியரும் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


.

கருத்துகள் இல்லை:

Post Top Ad