தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டு நலப் பணிதிட்ட துவக்க விழா குண்டல்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முனைவர் காமராஜர் அவர்கள் வரவேற்புரையாற்றினார், விஜய் புற்றுநோய் தர்மபுரி மையத்திலிருந்து டாக்டர் தினேஷ் சுந்தர்ராஜன் மாணவர்கள் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார், முகாம் விளக்க உரை முனைவர் பிரசாந்த் அவர்கள் வழங்கினார் ஆறுமுகம், கோவிந்தராஜ், பாண்டி, துரை, ரவி தலைமை ஆசிரியர் சரஸ்வதி, தமிழ்ச்செல்வி மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக