தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கோடியூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரத்திற்க்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோடியூர் கிராமத்தில் முதியவர் ஒருவர் மஞ்சபையில் சிறு சிறு பொட்டலங்களக கஞ்சா வைத்து கொண்டிருந்தது தெரிய வந்தது, அவரை பிடித்து விசாரித்ததில் சின்னசாமி (வயது. 65) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது, அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக