அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி மற்றும் பிற அரசு துறைகளுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை 12 வார காலத்திற்குள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள 27.01.2025 தேதியன்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிப்பேராணை மனு எண். WP (MD) Nos. 29035, 29217 & 30354 of 2024 and WMP (MD) Nos. 29035 & 24599 of 2024 & 286 of 2025-ன் வழக்குகளில் ஆணை பிறப்பித்துள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட நீதிமன்ற உத்தரவின்படி தருமபுரி மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி மற்றும் பிற அரசு துறைகளுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை 12 வார காலத்திற்குள், தொடர்புடைய அரசியல், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுமதி இல்லாத அனைத்து கொடிகம்பங்களையும் தாங்களாகவே அகற்றிக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தவறும் நேர்வில் நீதிமன்ற ஆணைப்படி தொடர் நடடிவக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக